×

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் லாரியிலிருந்து செல்போன் திருடிய மூன்று பேர் கைது

 

பொன்னேரி: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் செல்போன் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் தென்காசி சங்கரன்கோவிலில் சேர்ந்த லாரி டிரைவர் சீல்ராஜ்(25). இவரது தம்பி சிரஞ்சீவி(22). இவர்கள் தினமும் கண்டெய்னர் லாரிகளை அத்திப்பட்டு புதுநகர் ரவுண்டானா அருகில் நிறுத்துவது வழக்கம்.

அதேபோல் நேற்று இரவு லாரி நிறுத்திவிட்டு இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென சத்தம் கேட்டு எழுந்தபோது, பைக்கை ஸ்டார்ட் செய்து வேகமாக மூன்று பேர் பைக்கில் சென்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் லாரியைப் பார்த்தபோது லாரியில் வைத்திருந்த செல்போன் காணவில்லை. உடனடியாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சென்னை வியாசர்பாடி சேர்ந்த தினேஷ்குமார்(20), அருண்குமார்(20), ராஜேஷ்(18) பட்டிமந்தி கிராமத்தைச் சேர்ந்த அப்பன்ராஜ்(30) ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

The post மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் லாரியிலிருந்து செல்போன் திருடிய மூன்று பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Athipattu Pudunagar ,Meenjoor ,Attipattu Pudunagar ,Tenkasi ,Shankaran ,temple ,Meenjoor, Tiruvallur district ,
× RELATED வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில்...