×

இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

 

செய்யூர்: செய்யூர் வட்டம் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி, இடைக்கழிநாடு பேரூராட்சி அமைந்துள்ளது. 21 வார்டுகள் கொண்டுள்ள இந்த பேரூராட்சியில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அவ்வப்போது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி தகராறுகள் உள்ளிட்ட பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் தொடர் விபத்துகளால் உயிர் சேதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் அளிக்க சூனாம்பேடு அல்லது செய்யூர் காவல் நிலையம் செல்கின்றனர். இந்த 2 காவல் நிலையங்களும் 10 முதல் 15 கிலோ மீட்டர் வரை தொலைவு கொண்டுள்ளதால் புகார் அளிக்கச் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் அலைபேசி மூலம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் பட்சத்தில், சம்பவ இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் காவல் துறையினரும் செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இடைக்கழிநாடு பேரூராட்சியின் மைய பகுதியான கடப்பாக்கம் பகுதியில் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கென புதிய காவல் நிலையம் உருவாக்கி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய காவல் நிலையம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Adhikali Nadu ,Seyyur ,Seyyur Circle ,East Coast Road ,Adhikali Nadu Municipality ,
× RELATED இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய காவல் நிலையம் அமைக்க கோரிக்கை