×

ஊத்துக்கோட்டை சப்-டிவிஷனில் புதிதாக பொறுப்பேற்ற சிறப்பு உதவி ஆய்வாளர்கள் டிஎஸ்பியிடம் வாழ்த்து

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை சப் – டிவிஷனில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பொறுப்பேற்றவர்கள் டிஎஸ்பியிடம் வாழ்த்து பெற்றனர். ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆரணி, வெங்கல், பென்னாலூர் பேட்டை ஆகிய 5 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் 15 வருடங்களுக்கு மேல் தலைமை காவலர்களாக பணியாற்றிய போலிசார் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர்.

இதில் மேற்கண்ட காவல் நிலையங்களை சேர்ந்த ராவ்பகதூர், திருக்குமரன், தனசெழியன், நாகேஷ், அசோக், பரந்தாமன் ஆகிய 6 பேர் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் நேற்று ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமாரிடம் தங்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர் பெற்றது குறித்து தெரிவித்தனர். புதிதாக பதவி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்ஐகளை சிறப்பாக செயல்பட டிஎஸ்பி வாழ்த்தினார்.

 

The post ஊத்துக்கோட்டை சப்-டிவிஷனில் புதிதாக பொறுப்பேற்ற சிறப்பு உதவி ஆய்வாளர்கள் டிஎஸ்பியிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : DSP ,Opukkottai Sub-Division ,Futhukottai ,Sub-Division ,Deputy Superintendent of ,Beriapaliam ,Oothukottai ,Arani ,Wengal ,Pennalur Patta ,Oputhukottai Sub-Division ,Dinakaran ,
× RELATED காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி