×

கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

சின்னமனூர், ஜூன் 18: சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை மற்றும் குச்சனூர் பேரூராட்சிகள் உள்ளது. இப்பகுதிகளில் விவசாயிகள் அதனுடன் சேர்ந்து பசுமாடு, ஆடுகள் போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். மார்க்கையன்கோட்டையில் இருந்து குச்சனூர் இடையே உள்ள ஒரு தோட்டத்தில் 50 அடி ஆழ கிணற்றில் அப்பகுதியில் மேய சென்ற பசு மாடு ஒன்று திடீரென கரை ஓரம் செல்லும் போது வழுக்கி கிணற்றில் விழுந்தது. அப்பகுதியில் இருந்து உடனடியாக சின்னமனூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ராஜா தலைமையில் சம்பவ இடம் விரைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணற்றுக்குள் விழுந்து கிடந்த பசு மாட்டை மீட்டு உயிருடன் காப்பாற்றினர்.

The post கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Markayankottai ,Kuchanur ,
× RELATED கஞ்சா போதையில் ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர்கள் கைது