×

ஆட்டிறைச்சி கிலோ ஆயிரத்திற்கு விற்பனை

தொண்டி, ஜூன் 18: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் மாடு மற்றும் ஆட்டிறைச்சியை ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி என்ற பெயரில் இலவசமாக வழங்குவர். அதனால் இந்த காலக்கட்டத்தில் இறைச்சியின் தேவை அதிகமாக இருக்கும். இதை சாதகமாக பயன்படுத்திய வியாபாரிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.800லிருந்து 850 ரூபாய்க்கு விற்ற ஆட்டிறைச்சியை நேற்று ஆயிரம் ரூபாய்க்கு விற்றனர். இது பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் கூறியது, பக்ரீத் பண்டிகைக்காக அதிகளவில் குர்பானி கொடுப்பார்கள். இறைச்சியும் தட்டுப்பாடு அதிகம் ஏற்ப்பட்டது. இதை பயன்படுத்தி கிலோ ஆயிரம் ரூபாய் உயர்த்தி விற்பனை செய்தனர். இது பண்டிகை காலத்தில் மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது, விலை நிர்ணயம் மற்றும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றனர்.

The post ஆட்டிறைச்சி கிலோ ஆயிரத்திற்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Bakrit ,Muslims ,Gurbani ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் அத்துமீறுபவர்களை போலீசார் தடுக்க கோரிக்கை