×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை வைகை அணையில் குறையாத நீர்மட்டம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், பாசனத்திற்கு தண்ணீர் திறந்தும் வைகை அணையின் நீர்மட்டம் குறையவில்லை.ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. 71 அடி உயரமுள்ள இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 2 முறை 60 அடியை எட்டியுள்ளது. வைகை அணை நீர்மட்டம் உயர்வு காரணமாக மதுரை, திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல் போக பாசனத்திற்கும், மேலூர், கள்ளந்திரி பகுதிகளுக்கு ஒருபோக பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.கடந்த சில மாதங்களாக வைகை அணையில் இருந்து அதிக தண்ணீர் வெளியேற்றப்படும் காரணத்தினால் முறை பாசனம் அமல்படுத்தப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை மற்றும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 20 நாட்களில் மாற்றம் இல்லை. அணை நீர்மட்டம் 58.50 அடியாக உள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்தானது 821 கனஅடியாக உள்ளது. ஆண்டிபட்டி மற்றும் வருசநாடு பகுதிகளில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது….

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை வைகை அணையில் குறையாத நீர்மட்டம் appeared first on Dinakaran.

Tags : Vaikai dam ,Antipatti ,Vaiga Dam ,Andipatti ,Dinakaran ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?