×

சிறப்பு உதவி ஆய்வாளர்களாக 72 பேர் பதவி உயர்வு

ஈரோடு, ஜூன் 18: ஈரோடு மாவட்டத்தில் தலைமைக்காவலர்களாக பணியாற்றிய 72 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு காவல் துறையில் 25 ஆண்டுகள் போலீசாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய தலைமைக்காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவிக்கு காத்திருந்தனர். இந்த, பதவி உயர்வு கடந்த ஜூன் 1ம் தேதியே அமலானது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறையால் பதவி உயர்வு தாமதமானது. தேர்தல் விதிமுறை நிறைவு பெற்ற நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் சப்டிவிசன்களுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தலைமைக்காவலர்களாக பணியாற்றிய 72 பேர், சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

The post சிறப்பு உதவி ஆய்வாளர்களாக 72 பேர் பதவி உயர்வு appeared first on Dinakaran.

Tags : 72 ,Erode ,Tamil Nadu Police Department ,Dinakaran ,
× RELATED கங்கையில் கரையும் அசுத்தங்கள் என்னவாகின்றன?