×

பயணியின் உணவில் பிளேடு இருந்தது உண்மை தான்: உறுதி செய்தது ஏர் இந்தியா

மும்பை: பெங்களூரில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சென்றது. இந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் உலோக கத்தி இருந்தது. இதனை அவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணையை தொடங்கியது. இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஏர் இந்தியா பயணியின் உணவில் இருந்தது வெளிநாட்டு பொருள் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஏர் இந்தியாவிற்கு உணவு வழங்கும் கேட்டரிங் நிறுவனம் காய்கறியை நறுக்குவதற்காக பயன்படுத்தும் இயந்திரத்தில் இருந்து இந்த உலோக பொருள் வந்தது என கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணியுடன் ஏர் இந்தியா தொடர்பு கொண்டுள்ளது. இந்த அனுபவத்திற்கான அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளது.

The post பயணியின் உணவில் பிளேடு இருந்தது உண்மை தான்: உறுதி செய்தது ஏர் இந்தியா appeared first on Dinakaran.

Tags : Air India ,Mumbai ,Bangalore ,San Francisco ,
× RELATED மோடி சமூக நீதியைக் கடைபிடிக்காமல்...