×

அதிகாரிகளை லாரி ஏற்றி கொல்ல முயன்றவர்களை கைது செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்தவர்களை கால தாமதம் செய்யாமல் கைது செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை இலுப்பூரில் மணல் திருட்டை தடுப்பதற்காக சென்ற வருவாய் கோட்டாட்சியர் உள்பட அரசு அதிகாரிகள் மீது சமூக விரோதிகள் மினி லாரியை ஏற்றி கொல்ல முயற்சி செய்தபோது அதிஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். காவல் துறை கால தாமதம் செய்யாமல் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோலா, பாமக தலைவர் அன்புமணி விடுத்த அறிக்கையில், ‘‘லாரி ஏற்றி கோட்டாட்சியரை கொல்ல நடந்த முயற்சி கண்டிக்கத்தக்கது. மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

The post அதிகாரிகளை லாரி ஏற்றி கொல்ல முயன்றவர்களை கைது செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : G. K. Vasan ,Chennai ,Tamaga ,Pudukkottai Ilupur ,G. K. Vasan Anbumani ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசாக இருந்தாலும் நீட் தேர்வு...