×

அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை

சென்னை: அரசு அறிவித்­ததை விட அதிக கல்விக் கட்­ட­ணத்தை வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்­கள் கோரிக்கை விடுத்துள்ள­னர். தமிழ்­நாடு பல்­கலைக்­கழ­கங்­கள் மற்­றும் கல்­லூரி­கள் எஸ்சி, எஸ்டி ஆசி­ரியர் சங்­கத்தின் தலை­வர் கதிரவன் கூறிய­தா­வது: அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரி­களில் காலை வகுப்பு மாணவர்­களும், மாலை­யில் சுயநிதி மாணவர்­க­ளும் என இரண்டு தொகுதி­கள் அரசு ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்பட்டுள்­ளன. இந்நிலை­யில், அரசு நிர்­ண­யித்த கட்­ட­ணம், காலை வகுப்­புகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரமாக இருந்­தா­லும், அரசு உதவி பெறும் கல்லூரி­களில், குறிப்பாக, நாக் அந்­தஸ்து’ பெற்ற கல்லூரி­க­ளில் மாணவர்­க­ளி­டம், உண்­மை­யான தொகையை விட, ஐந்து முதல், ஆறு மடங்கு அதிக கட்­ட­ணம் வசூலிக்­கப்­ப­டுகி­றது. இதை அரசு கண்­கா­ணிக்க வேண்டும். மேலும் அரசு நிர்­ண­யித்த கட்டண விவரங்­களை இணை­ய­த­ளத்தில் வெளியி­ட­வேண்டும். மாணவர்­க­ளி­டம் அதிக கட்­ட­ணம் வசூலிக்கும் கல்லூரி­கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளி­யிட வேண்டும். மேலும், அரசு உத்­த­ரவை மீறி செயல்­ப­டும் கல்லூரிகளுக்கு நிதியு­தவி செய்­வதை நிறுத்த வேண்டும். அந்த நிறுவனங்களின் முதல்­வர்­களை சஸ்­பெண்ட் செய்ய வேண்டும். இவ்­வாறு கூறியுள்­ளார்.

பல்­க­லைக்­க­ழக ஆசிரியர் சங்­க தலை­வர் காந்­தி­ராஜ் கூறிய­தா­வது: தமிழ­கத்தில் 163 அரசு உதவி பெறும் கலை மற்­றும் அறிவியல் கல்லூரி­கள் உள்­ளன. இதில் 10 சத­வீத கல்­லூரி­கள் மட்­டுமே அரசு நிர்­ணயித்த கட்டண கட்­ட­மைப்பை கடை­பிடிக்கின்­றன. எனவே பொறியி­யல் மற்­றும் மருத்துவக் கல்­லூரி­க­ளுக்கு இணை­யான கட்­ட­ணக் கட்­டுப்­பாட்­டு குழுவை அமைக்க வேண்­டும் என்று கடந்த பத்­தாண்­டு­க­ளாக அரசை வலியுறுத்தி வருகி­றோம். இவ்­வாறு அவர் தெரிவித்தார். எங்­க­ளுக்கு புகார்­கள் வந்த கல்லூரி­கள் மீது நடவடிக்கை எடுக்­கப்­பட்­டுள்ளது. கட்­டண ஒழுங்­குமுறை குழுவை நியமிப்­பது குறித்து இயக்குனர­கம் கோரிக்­கையை பரிசீலித்து தேவையான நடவடிக்­கை­ எடுக்கும் என கல்லூரி கல்வி இயக்குனரக அதிகா­ரிகள் தெரிவித்தனர்.

The post அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Universities and Colleges SC ,ST Teachers Union ,President ,Kathiravan ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...