×

பஸ் ஸ்டாப்பில் பெண் கொலை: வாலிபர் வெறிச்செயல்

திருச்சி: திருச்சி மண்ணச்சநல்லூர் அடுத்த சிறுகாம்பூர் கடைவீதியை சேர்ந்தவர் சலவை தொழிலாளி ரவிக்குமார்(48). இவரது மனைவி சுமதி(42). திருச்சியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இன்று காலை 8.30 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக சிறுகாம்பூர் கடைவீதியில் பஸ்சுக்காக சுமதி நின்று கொண்டிருந்தார்.

அப்போது வாழ்மால்பாளையம் தெற்கியூரை சேர்ந்த மாரிமுத்து(30) அங்கு வந்தார். பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுமதியை சரமாரி குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுமதி அந்த இடத்திலேயே பலியானார். இதையடுத்து அங்கிருந்து மாரிமுத்து தப்பியோட முயன்றார். அப்போது பொதுமக்கள் விரட்டி சென்று மாரிமுத்துவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ரவிக்குமாரின் தம்பியுடன் சேர்ந்து கேரளாவில் உள்ள துணிக்கடையில் மாரிமுத்து வேலை பார்த்து வந்தார். இதனால் ரவிக்குமார் வீட்டுக்கு மாரிமுத்து அடிக்கடி வந்து சென்றார். இதேபோல் நேற்று ரவிக்குமார் வீட்டுக்கு மாரிமுத்து சென்றார். அப்போது வீட்டில் குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி வீட்டுக்கு வர வேண்டாம் என்று மாரிமுத்துவை சுமதி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரத்துடன் மாரிமுத்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்த சுமதியை கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாரிமுத்துவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பஸ் ஸ்டாப்பில் பெண் கொலை: வாலிபர் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Ravikumar ,Sirakampur ,Trichy Mannachanallur ,Sumathi ,Trichy ,Stop ,
× RELATED மதுபாட்டில் விற்றவர் கைது