சென்னை: தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேடையில் இருந்த அமித்ஷாவின் உடல்மொழியே அவர் ஆத்திரத்தில் தமிழிசையை பேசியதை உணர முடிந்தது.
அமித் ஷாவுக்கு மேடை நாகரிகம் தெரியவில்லை: அதிமுக
உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு தமிழிசையை மேடையில் வைத்து கடுமையாக பேசியிருக்கக் கூடாது. மேடை நாகரிகம், பண்பாடு என்னவென்று தெரியாமல் அமித்ஷா நடந்து கொண்டுள்ளார்.
அண்ணாமலையால் சமூகவிரோதிகளின் கூடாரமானது பாஜக
அண்ணாமலை வந்தபிறகு சமூகவிரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவிட்டதை தமிழிசை தெளிவுபடுத்தி உள்ளார் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழிசை பேசியது தவறு என்றால், டெல்லிக்கு அழைத்து கண்டித்திருக்கலாம். மேடையில் அவமானப்படுத்தியிருக்கக் கூடாது.
பாஜக வாக்கு சதவீதம் உயரவே உயராது: ஜெயக்குமார்
10 பேரை சேர்த்துக்கொண்டு அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு, வாக்கு சதவீதம் உயர்வு என அண்ணாமலை கணக்கு. அதிமுகவை போல, தனித்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு, வாக்கு சதவீதத்தை அண்ணாமலை பெற முடியுமா?. எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டாலும் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயரவே உயராது. 2026, 31, 36, 42 எத்தனை தேர்தல்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒருபோதும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக எனும் சரித்திரத்தில் ஓபிஎஸ் ஒரு குறுநாவல்
அதிமுக என்பது ஒரு சரித்திரம், ஓ.பி.எஸ். அதில் ஒரு குறுநாவல் அவ்வளவுதான் என ஜெயக்குமார் சாடியுள்ளார்.
The post தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம் appeared first on Dinakaran.