×

தங்கம் விலை பவுனுக்கு 120 குறைந்தது

சென்னை: தங்கம் விலை இன்று காலையில் பவுனுக்கு ரூ.120 குறைந்தது. தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு பவுன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.53,440க்கு விற்கப்பட்டது. 13ம் தேதி ஒரு பவுன் ரூ.53,280, 14ம் தேதி பவுன் ரூ.53,200 என விலை குறைந்தது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது.

அதாவது, கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,705க்கும், பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு பவுன் ரூ.53,640க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலையில் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது, இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,690க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.53,520க்கும் விற்கப்பட்டது.

The post தங்கம் விலை பவுனுக்கு 120 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...