×

போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

பெங்களூரு: போக்சோ வழக்கில் சிஐடி அதிகாரிகள் முன் விசாரணைக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆஜரானார். சிறுமி பாலியல் வழக்கில் எடியூரப்பாவை கைதுசெய்ய ஏற்கனவே ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. கடந்த பிப்.2-ம் தேதி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எடியூரப்பா மீது புகார் எழுந்தது. எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் மார்ச் 17-ம் தேதி சிறுமியின் தாயார் புகார் அளித்தார். சிறுமியின் தாயார் புகாரின் பேரில் சதாசிவம் நகர் போலீசார் எடியூரப்பா மீது வழக்கு பதிவுசெய்தனர். எடியூரப்பா இன்று காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

The post போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா appeared first on Dinakaran.

Tags : Former ,Karnataka ,Chief Minister ,Yeddyurappa ,POCSO ,Bengaluru ,CIT ,ECtHR ,Former Karnataka ,Chief Minister Yeddyurappa ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு...