×

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்

டெல்லி: மக்களவை தேர்தலில் கட்சிகள் ஏற்படுத்திய அதிர்வலைகளின் காரணமாக சட்டைப்பை அளவிலான இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் புத்தகம் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே பாஜக மாற்றும் என்று கையடக்க அரசியல் அமைப்பு புத்தகத்துடன் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வந்தார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தையே திருந்துவார்கள் என்று பிரதமர் மோடியும் பரப்புரை செய்தார்.

கூட்டணி பலத்துடன் ஆட்சியமைத்த பிரதமர் மோடி பதவியேற்றவுடன் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை தொட்டு வணங்கிய நிகழ்வும் பலரது கவனத்தை ஈர்த்தது. இவற்றின் பின்னணியில் கையடக்க அளவிலான அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. ஓராண்டுக்கு 4 ஆயிரம் பிரதிகள் வரை மட்டுமே விற்பனையான இந்த கையடக்க அரசியல் சாசன புத்தகம் கடந்த பிப்ரவரி முதல் மே வரை மட்டுமே 5,000 பிரதிகளை தாண்டி விற்பனையாகியுள்ளது. இளம் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்களை மாணவர்களை தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் சாசனத்தை அறிந்துகொள்வதற்காக ஆர்வம் பெருகியிருப்பதை இது காட்டுவதாக பதிப்பகத்தார் கூறுகின்றனர்.

மக்களுக்கு அவர்களின் உரிமைகளை நினைவூட்டி விழிப்புடன் இருப்பதற்கான சைகையை ராகுல் காந்தி அளித்ததனால் கையடக்க அரசியல் சாசன புத்தக விற்பனை சூடுபிடித்துள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

The post பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல் appeared first on Dinakaran.

Tags : EBC ,Delhi ,Lok Sabha elections ,BJP ,India ,Dinakaran ,
× RELATED எந்த விசாரணைக்கும் தயார் எக்ஸிட் போலை...