×

வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை

புதுடெல்லி: ரயிலின் வேகக்கட்டுப்பாட்டை இன்ஜின் டிரைவர்கள் மீறுவதை தடுப்பதற்கான ஆலோசனையை ரயில்வே வாரியம் மேற்கொண்டுள்ளது. ரயில்களி்ல் பாதுகாப்பான பயணத்திற்காக விதிக்கப்படும் வேகக் கட்டுப்பாடு குறித்து, இன்ஜினில் ஏறும் முன்பாகவே லோகோ பைலட் மற்றும் அவர்களின் உதவி பைலட்களுக்கு தெரிவிக்கப்படும். ஆனாலும் அதையும் மீறி பல சமயங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. டெல்லி, உபி, மபி இடையே 2 சம்பவங்களில் ஆற்றுப் பாலத்தின் மீது 20 கிமீ வேகத்தில் ரயிலை இயக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் 120 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற கவனக்குறைவால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இன்ஜின் டிரைவர்கள் வேகக்கட்டுப்பாட்டை மீறுவது ஏன் என்பதை கண்டறிய ரயில்வே வாரியம் குழு அமைத்துள்ளது.இக்குழு சமீபத்தில் நாடு முழுவதும் 180 லோகோ பைலட், துணை பைலட்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியது. இதில், பல்வேறு ஆலோசனைகள் வந்துள்ளன. உதாரணமாக, வேகத்தை குறைக்க வேண்டிய இடத்திற்கு 3 கி.மீ முன்பாகவே வாக்கி-டாக்கி மூலம் லோகோ பைலட்டுக்கு ரயில் காவலர் நினைவூட்ட பரிந்துரைக்கப்பட்டது. இதுபோன்ற பரிந்துரைகளை குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

The post வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Railway Board ,New Delhi ,Loco Pilot ,Co ,Dinakaran ,
× RELATED பெங்களூரு-மைசூரு மற்றும்...