×

பக்ரீத் பண்டிகை ஜனாதிபதி வாழ்த்து

புதுடெல்லி: பக்ரீத் பண்டிகையையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பக்ரீத் திருவிழாவை கொண்டாடும் வௌிநாட்டிலுள்ள அனைத்து சக குடிமக்களுக்கும், இந்தியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த திருவிழா தியாகத்தின் சின்னம். இது அன்பு, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய செய்திகளை நமக்கு உணர்த்துகிறது. மனித குலத்துக்கு தன்னலமற்ற சேவை செய்ய நமக்கு ஊக்கம் தருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் வளர்ச்சி, நலனுக்காக ஒன்றிணைந்து பாடுபட உறுதியேற்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பக்ரீத் பண்டிகை ஜனாதிபதி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : President ,Bakrit ,New Delhi ,Drabupati Murmu ,House ,
× RELATED பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில்...