×

இரு மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேகதாது திட்டம் தொடங்கப்படும்: ஒன்றிய அமைச்சர் சோமண்ணா பேட்டி

பெங்களூரு: இரு மாநிலங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி மேகதாது திட்டம் தொடங்கப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார். ராம்நகர் மாவட்டம், கனகபுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் வி.சோமண்ணா கலந்து கொண்டு பேசியதாவது, ‘ரயில் தண்டவாளத்தில் சிக்கி விலங்குகள் இறக்கின்றன. அதை தவிர்க்க வேண்டும் என்பதே மோடியின் விருப்பம்.

இதற்கான திட்டம் வகுக்கப்படும். எனக்கு நீர்வளத்துறை இலாகா ஒதுக்கியதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நான் கர்நாடகாவுக்கு மட்டும் அமைச்சர் இல்லை. இந்திய நாட்டின் அமைச்சர். எல்லா மாநிலங்களும் ஒன்றுதான். எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் இருந்து விலகாமல் பணியாற்றுவேன். நான்கு மாநிலங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி மேகதாது திட்டம் தொடங்கப்படும். பேச்சுவார்த்தையால் எவ்வளவு பெரிய பிரச்னைக்கும் தீர்வு காணமுடியும். சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை ஒன்றிய அரசு செய்யும்’ என்றார்.

The post இரு மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேகதாது திட்டம் தொடங்கப்படும்: ஒன்றிய அமைச்சர் சோமண்ணா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Somanna Petty ,Bengaluru ,Union Minister of State Somanna ,V. Somanna ,Kanakapura, Ramnagar district ,Somanna ,
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...