×

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் அமித் ஷா தலைமையில் ஆய்வு

புதுடெல்லி: காஷ்மீரில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களையடுத்து, அங்கு பாதுகாப்பு நிலைைமை குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டம் நேற்று நடந்தது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி, கத்துவா ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து 4 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில், 9 பேர் பலியானார்கள். 41 பேர் படுகாயமடைந்தனர். வரும் 29ம் தேதி அமர்நாத் கோயிலுக்கான புனித யாத்திரை துவங்கும் நிலையில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சில நாட்களுக்குமுன் பிரதமர் மோடி காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தினார். அதைதொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவு துறை இயக்குனர் தபன் தேக்கா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் அமித் ஷா தலைமையில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Amit Shah ,New Delhi ,Union Home ,Minister ,Jammu ,Riasi ,Kathua ,Dinakaran ,
× RELATED காஷ்மீரில் அடுத்தடுத்து தாக்குதல்:...