×

சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தில் இருந்து தினமும் 400 பேரை திருப்பதி அழைத்து செல்ல திட்டம்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுப்பயணம், திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும். திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து, சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்திலிருந்து பயணிகளை அழைத்து செல்கின்றது. ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார்.

வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயண விளக்கங்களை அளிப்பர். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் தரிசனம் முடிந்த பின்னர் பயணிகளுக்கு திருப்பதி லட்டு வழங்கப்படும். மேலும் மதிய உணவுக்குபின் திருச்சானுார் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இரவு உணவு வழங்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பயணிகளை கொண்டு சேர்க்கப்படும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். திருப்பதி சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களை 180042531111, 044-25333333 மற்றும் 044-25333444 எண்களை தொடர்பு கொண்டு பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தில் இருந்து தினமும் 400 பேரை திருப்பதி அழைத்து செல்ல திட்டம்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tourism Development Corporation ,Minister Ramachandran ,CHENNAI ,Minister ,Ramachandran ,Tamil Nadu Tourism Development Corporation ,Tirupati Day Tour ,Tirupati Tourism ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்...