×

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்ததை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக புகழேந்தி கடந்த ஏப்.6ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பினை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று, இதற்கான வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Vikrawandi ,Chennai ,Election Commission ,Vikriwandi ,Government of Tamil Nadu ,Vikrawandi Assembly Constituency ,Tamil Nadu Government ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...