×

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!

பாடாலூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா குருவம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகள் கீர்த்தனாவிற்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் 14 ம் தேதி வெள்ளிக்கிழமை தனது கணவருடன் சொந்த ஊரான அடைக்கம்பட்டி கிராமத்திற்கு வந்தார். பின்னர் நேற்று தனது கணவர் நாகேந்திரன் அவரது சொந்த ஊரான குருவம்பட்டிக்கு சென்று விட்டார். நேற்று இரவு கீர்த்தனா தனது கணவருக்கு செல்போனில் பேசினார்.

அப்போது அவர் எனது அப்பா, அம்மா வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளனர். நீங்கள் அடைக்கம்பட்டிக்கு வாருங்கள் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கீர்த்தனா தூக்கு போட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். உடனடியாக நாகேந்திரன் அவரது மாமனார் செல்வராஜுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக வீட்டிற்கு கீர்த்தனாவை காப்பாற்றுங்கள் என்று கதறினார்.

இதையடுத்து செல்வராஜ் தனது வீட்டில் வந்து பார்த்தபோது கீர்த்தனா சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கீர்த்தனாவிற்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால், சார் ஆட்சியர் கோகுல் விசாரணை நடத்தி வருகிறார்.

The post பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை! appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Nagendran ,Mannachanallur Taluga Guruvampatty ,Trichy district ,Selvaraj ,Kirtana ,Alatur Taluga Adaikampatty ,Perambalur district ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...