×

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை


கன்னியாகுமரி: குமரியில் கள்ளக் கடல் நிகழ்வு எதிரொலியாக அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலில் இருந்து அலைகள் எழும்பி கடும் சீற்றத்துடன் கரையை நோக்கி வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவளம் மற்றும் சுற்று வட்டார இடங்களில் ஆபத்தான முறையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. கடலில் இறங்க தடை இருக்கும் நிலையில், வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

The post குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kanyakumari ,
× RELATED குமரி மாவட்டம்; விவேகானந்தர்...