×

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

டிரினிடாட்: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வென்றது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் 10 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் இங்கிலாந்து அணி 122/5 ரன்கள் எடுத்தது. நமீபியா 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியும், நமீபியா அணியும் அன்டிகுவாவில் உள்ள விவிரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. மழை காரணமாக இந்த போட்டி10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸை வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதலில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும், அதன் பின் அதிரடி காட்டியது.

இங்கிலாந்து அணி 10 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்ட்ரோ 31 ரன்களும், புரூக் 47 ரன்களும் எடுத்தனர். அதனை தொடர்ந்து 10 ஓவர்களில் 123 என்ற இமாலய இலக்கை நோக்கி நமீபியா அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் நமீபியா பவுண்டரி அடிக்க முடியாமல் திணறிவந்தனர்.

இருப்பினும், 6-10 ஓவர்களில் சற்று அதிரடியாக ஓரிரெண்டு பவுண்டரிகள், சிக்ஸர்களை அடித்து கொண்டே இருந்தனர். தொடர்ந்து விளையாடிய நமீபியா அணியால் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நமீபியாவை வென்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி பிரகாசமாக்கி உள்ளது.

இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தினால் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஸ்காட்லாந்து அணி நிர்ணயித்த 180 ரன்களை 5.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

 

The post டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து appeared first on Dinakaran.

Tags : T20 World Cup Leaguepot ,England ,Namibia ,Trinidad ,World Cup T20 Cricket Leaguematch ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்து -வெஸ்ட்இண்டீஸ் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்