வில்லிபுத்தூர், ஜூன் 16: வில்லிபுத்தூர் அருகே விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக தென்னகன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 55க்கும் மேற்பட்டவர்களுக்கு தென்னை மர கன்றுகள் வழங்கப்பட்டது. மாவட்ட தென்னை விவசாய சங்க தலைவர் முத்தையா, மம்சாபுரம் தென்னை விவசாயிகள் சங்க தலைவர் அப்பாஸ், செயலாளர் பால கணேசன், பொருளாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல் appeared first on Dinakaran.