×

மானாவாரியில் பருத்தி பயிரிட்டு மகசூல் பெறலாம்

தொண்டி, ஜூன் 16: மானாவாரியில் பருத்தி பயிரிட எல்.ஆர்.ஏ- 5166, சுமங்கலா, கே-11, எஸ்.வி.பி.ஆர்-2, கே.சி-2 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். 45*15 சென்டி மீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து எக்டேருக்கு 15 கிலோ என்ற அளவில் விதைக்க வேண்டும். பஞ்சு நீக்கிய விதையுடன் 3 கிராம் பாலிகோட், கார்பன்டைசிம் 2 கிராம், இமிடர்குளோபரிட் 7 கிராம், சூடா மோனாஸ் ஃப்ளூரசன்ஸ் 10 கிராம், அசோபாஸ் 40 கிராம் கலந்து விதைப்பதால் விதைத்த 45வது நாள் வரை சாறு உறிஞ்சும் பூச்சிகளிலிருந்து பயிரினை காத்து ஆரம்பத்தில் நல்லபயிர் வளர்ச்சி அடைய முடியும். நுண் ஊட்டச்சத்தாக எக்டேருக்கு சிங்க் சல்பேட் 50 கிலோ அடியுரமாக அளிப்பதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்கிறது. பயிரின் வயது 150 நாட்களுக்குள் இருக்கும்பேது, 60 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.

150 நாட்களுக்கு மேல் ஆகும் போது தழைச்சத்து 80 கிலோவிற்கு மேல் இடவேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு தழைச்சத்து 120 கிலோ இடவேண்டும். மேற்காணும் உரத்தில் மணிச்சத்து முழுவதும் மற்றும் தழைச்சத்து, சாம்பல் சத்தினை பாதி அடியுரமாகவும் இடவேண்டும். ரசாயன உரங்களாக இருந்தால் மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை பெற்ற பின்பு உரமிட வேண்டும். பரிசோதனை செய்யாத நிலங்களுக்கு களை முளைப்பதற்கு முன் ஃப்ளூகுளோராலின் 2.2 லிட்டர், பென்டிமெத்தலின் 3.3 லிட்டர் ஆகியவற்றில் ஒன்றினை விதைத்த 3வது நாள் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். அடி உரமாக எக்டேருக்கு 50 கிலோ சிங்க் சல்பேட் அளித்தால் நுண்ஊட்ட சத்து அளிக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

The post மானாவாரியில் பருத்தி பயிரிட்டு மகசூல் பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Sumangala ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் அத்துமீறுபவர்களை போலீசார் தடுக்க கோரிக்கை