×

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

ஊட்டி: நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் ஆன நிலையில், அலங்கரித்த மலை ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 1899ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மலை ரயில் முதன்முறையாக தொடங்கப்பட்டது. நேற்றுடன் 125வது ஆண்டானதை கொண்டாடும் வகையில் குன்னூர் ரயில் நிலையத்தில் மலை ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலைகளில் தவழ்ந்து வந்த மலை ரயில் அலங்கரிக்கப்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது. பின்னர், ரயில் நிலையத்தில் கேக் வெட்டி 125வது ஆண்டு மலை ரயில் தினம் கொண்டாடப்பட்டது.

ரயிலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் மற்றும் கேக் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகள் இதுவரை இது போன்ற பயணத்தை தாங்கள் கண்டதில்லை என உற்சாகத்துடன் தெரிவித்தனர். குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைகளின் வழியே வரும் போது குகைகள், இயற்கை காட்சிகள், அருவிகள், பாலங்கள் என அனைத்தையும் பார்க்கும் போது, மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்தனர்.  இவ்விழாவில், ரயில்வே ஊழியர்கள், மலை ரயில் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Hill ,Nilgiri Mountain Railway ,Coonoor Hill Railway ,Mettupalayam ,
× RELATED நீலகிரி மலை ரயில் 125 ஆண்டு நிறைவு..!!