×

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்த 11 பேரின் வீடுகள் இடிப்பு


மாண்டலா: மத்தியப் பிரதேசத்தில் வீட்டு பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டன. மபியில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக மோகன்யாதவ் உள்ளார். மபியில் உள்ள நைன்பூர் பகுதி பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி ஆகும். இங்கு உள்ள பைன்வாஹி என்ற இடத்தில் இறைச்சிக்காக ஏராளமான பசுக்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக மண்டலா காவல் கண்காணிப்பாளர் ரஜத் சக்லேச்சாவுக்கு தகவல் கிடைத்தது.

அப்போது 150 மாடுகள் வீடுகளில் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. அந்த 11 பேரின் வீடுகளிலும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மாட்டு இறைச்சி மீட்கப்பட்டது. அந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததால் அவற்றை அதிகாரிகள் இடித்து தள்ளினார்கள்.

The post பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்த 11 பேரின் வீடுகள் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Mandala ,Madhya Pradesh ,BJP ,Mabi ,Mohanyadav ,Chief Minister ,Nainpur ,
× RELATED மண்டலாபிஷேக விழா