×

நாகர்கோவில் அருகே வியாபாரி வீட்டில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு

நாகர்கோவில், ஜூன் 16: நாகர்கோவில் அருகே உள்ள திக்கிலான்விளை பகுதியை சேர்ந்தவர் காமராஜ். மாங்காய் வியாபாரி. நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் இவர் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது இவரது வீட்டின் முன்புறத்தில் பெரிய பாம்பு கிடந்தது. இதை பார்த்து காமராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவர் மின் விளக்கை போட்டதும், பாம்பு சீறியது.

பின்னர் நகராமல் அங்கேயே கிடந்தது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நாகர்கோவிலில் இருந்து உதவி கோட்ட அலுவலர் துரை மேற்பார்வையில் தீயணைப்பு துறையினர் சென்று அந்த பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு கொடிய விஷ தன்மை ெகாண்ட வகையை சேர்ந்தது ஆகும். பின்னர் அந்த பாம்பை, வனத்துறையினரிடம் ஒப்படைத்து காட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர்.

The post நாகர்கோவில் அருகே வியாபாரி வீட்டில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kamaraj ,Tikilanvilai ,Dinakaran ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...