×

ரூ.90 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்கம்

அரூர், ஜூன் 16: கம்பைநல்லூர் அடுத்த திப்பம்பட்டி கூட்ரோட்டில், நான்கு வழி சாலை சந்திப்பு உள்ளது. தர்மபுரி-திருப்பத்தூர் சாலையும், அரூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையும் சந்திக்கும் முக்கியமான சாலை சந்திப்பு என்பதால், எப்போதும் அதிக வாகனங்கள் இந்த சாலையை கடக்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் காணப்படும். இதனால் ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனாலும், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ரூ.90 லட்சம் மதிப்பீட்டில், ரவுண்டானாவை அகற்றி விட்டு, சாலையை அகலப்படுத்தி சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சாலை விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

The post ரூ.90 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Tippampatti Kooroad ,Campinallur ,Dharmapuri-Tirupathur road ,Arur ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED ₹25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை