×

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி


அம்ரேலி: குஜராத்தின் அம்ரேலி மாவட்டம் சுர்க்கப்பரா கிராமத்தில் போர்வெல் ஒன்றில் ஆரோஹி என்ற ஒன்றரை வயது குழந்தைவிழுந்து 50 அடியில் சிக்கி கொண்டது. 17 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நேற்று அதிகாலை 5 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் ஆரோஹி வௌியே எடுத்து வரப்பட்டார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Gujarat Amreli ,Aarohi ,Churkappara ,Gujarat ,Amreli district ,Aarohi Vauye ,
× RELATED கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு..!!