×

போக்சோ வழக்கு விவகாரம்; சிஐடி விசாரணைக்கு நாளை ஆஜராவேன்: எடியூரப்பா உறுதி

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த சமீபத்தில் மறைந்த மமதாசிங், சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் 14ம் தேதி புகார் ஒன்று கொடுத்தார். அதில் எனது மகளுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதையேற்று கொண்ட சிஐடி போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எடியூரப்பா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தடை பெறப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒருவாரமாக டெல்லியில் தங்கி இருந்த எடியூரப்பா நேற்று விமானம் மூலம் பெங்களூரு திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘என்மீதான புகாரை சட்டப்படி சந்திப்பேன். நாைள விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் கொடுப்பேன்’ என்றார்

The post போக்சோ வழக்கு விவகாரம்; சிஐடி விசாரணைக்கு நாளை ஆஜராவேன்: எடியூரப்பா உறுதி appeared first on Dinakaran.

Tags : POCSO ,CIT ,Yeddyurappa ,Bengaluru ,Mamata Singh ,Sadasiva Nagar ,Chief Minister ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவாரா?.. எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்