×

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் சிறப்பு தனிப்படை எஸ்ஐ மகாலிங்கம் தலைமையிலான போலீசார் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுகும்மிடிப்பூண்டி திருப்புமுனையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இரண்டு வாலிபர்களிடம் விசாரித்தனர். அப்போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, போலீசார் இருவரையும் சோதனை செய்தபோது, இரண்டு கத்திகளை வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார், இரண்டு வாலிபர்களையும் சிப்காட் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்த பால்ராஜ்(31), மற்றும் அஜித்(23) என தெரியவந்தது. இதில், பால்ராஜ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். பின்னர், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi bypass road ,Kummidipoondi ,SI Mahalingam ,Tiruvallur District Police Special Special Force ,Chennai-Kolkata National Highway ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...