×

பின்னத்தூர் காத்தவராயன் கோயில் பஸ் நிறுத்தத்திற்கு பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்

 

முத்துப்பேட்டை, ஜூன் 15: பின்னத்தூர் காத்தவராயன் கோயில் பஸ் நிறுத்தத்திற்கு பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலை காத்தவராயன் கோயில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இதற்கு இதுநாள் வரை பஸ் நிழற்குடை அமைக்க வில்லை. இங்கு வந்து தான் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி சுற்று பகுதி கிராம மக்கள் திருத்துறைப்பூண்டி மார்க்கம் செல்லவும் முத்துப்பேட்டை மார்க்கம் செல்லவும் பயணிகள் காத்திருந்து பஸ்கள் மூலம் சென்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் இந்த பஸ் நிறுத்தத்தை இப்பகுதி மக்கள் மட்டுமின்றி கரைகாரன்வெளி தோலி மற்றும் அதன் சுற்று பகுதி கிராம மக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் என தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இங்கு நிழற்குடை இல்லாததால் கடும் வெயிலிலும் மழைக்காலத்தில் மழையில் நனைந்து கொண்டே பல மணி நேரம் நிற்கும் நிலைமை உள்ளது. அதனால் இங்கு வரும் மக்கள் நலன் கருதி இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பின்னத்தூர் காத்தவராயன் கோயில் பஸ் நிறுத்தத்திற்கு பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pinnathur Kathavarayan Temple ,Muthuppet ,Kathavarayan temple ,Pinnathur East Coast Road ,
× RELATED தண்ணீர் நிரம்பி இருப்பதால்...