×

தந்தையுடன் தகராறு; மகன் தற்கொலை

 

ஈரோடு, ஜூன் 15: பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோவில், சக்தி நகரை சேர்ந்தவர் கதிர்வேல் (36). இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு, குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கதிர்வேல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு பரிமளா சென்றுவிட்டார். பின்னர், பெற்றோருடன் வசித்து வந்த கதிர்வேல் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.

அப்போது, வீட்டின் பத்திரத்தை தன்னிடம் கொடுக்கும் படி தந்தை பழனிசாமியிடம் தகராறு செய்தார். ஆனால், வீட்டு பத்திரத்தை கொடுக்க முடியாது என்று தந்தை மறுத்ததால் கோபமடைந்த கதிர்வேல் மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு, ஜூன் 15: உலக ரத்த கொடையாளர்கள் தினத்தையொட்டி ரத்த தான விழிப்புணர்வு பேரணி நேற்று காலை ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பேரணியானது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பன்னீர்செல்வம் பூங்கா வரை சென்று நிறைவடைந்தது. பேரணியின், போது ரத்த தானத்தின் அவசியம் குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாதைகள் ஏந்தி சென்றனர். பேரணியில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தந்தையுடன் தகராறு; மகன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Kathirvel ,Shakti Nagar ,Kanchikovil ,Perundurai ,Parimala ,
× RELATED தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை