×

காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சன்னதி தெருவில் நேற்று இரவு நிறுத்தப்பட்டிருந்த காரில் முன் இருக்கை பகுதியில் வரிசையாக மண்டை ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. திருவண்ணாமலை டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வாரணாசி பகுதியில் இருந்து அகோரி ஒருவர் திருவண்ணாமலைக்கு காரில் வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மாட வீதி வழியாக நடந்து சென்றிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, நிர்வாண நிலையில் அகோரி சென்று கொண்டிருந்தார். உடனடியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, திருவண்ணாமலை கிரிவல பாதையில் அவர் தங்குவதாக திட்டமிட்டிருந்த ஆசிரமத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

The post காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Agori ,Thiruvannamalai ,Sannathi Street ,Tiruvannamalai ,Town police ,Akhori ,Varanasi ,
× RELATED திருப்புவனத்தில் அகோரி ஆசிரமம் திறப்பு