×

சாமியாரை அடித்துக்கொன்று சடலம் புதைப்பு மதுரையை சேர்ந்தவர் காட்பாடி அருகே வள்ளிமலையில் பயங்கரம்

பொன்னை, ஜூன் 15: காட்பாடி அருகே வள்ளிமலையில் மதுரையை சேர்ந்த சாமியாரை மர்ம ஆசாமிகள் அடித்துக்கொலை செய்து அவரது சடலத்தை புதைத்து சென்றுள்ளனர். இது ெதாடர்பாக ேபாலீசார் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு மலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமங்கள் மற்றும் அன்னதான கூடங்களில் 150க்கும் மேற்பட்ட சாமியார்கள் தங்கியுள்ளனர். அதேபோல், வள்ளிமலை கோட்டநத்தம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிசையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த சாமியார் ரவி(65) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக இரவு நேரத்தில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சாமியார் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசாருக்கு துப்புக்கொடுத்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த சமூக விரோதிகள் சாமியாரை அடித்துக்கொலை செய்து சடலத்தை புதைத்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் செய்தி பரவியது. இது வள்ளிமலை பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையறிந்த மேல்பாடி போலீசார் நேற்று வள்ளிமலை பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சாமியார் சடலம் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை கண்டறிந்தனர்.

மேலும், ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இன்று தாசில்தார் சரவணன் முன்னிலையில் சாமியார் சடலத்தை ேதாண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், சாமியார் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமிகள் அவரை அடித்துக்கொலை செய்து சடலத்தை புதைத்து விட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். வள்ளிமலையில் சாமியார் அடித்துக்கொலை செய்யப்பட்டு, சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த கொலை ெதாடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post சாமியாரை அடித்துக்கொன்று சடலம் புதைப்பு மதுரையை சேர்ந்தவர் காட்பாடி அருகே வள்ளிமலையில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vallimalai ,Katpadi ,Ponnai ,Gadpadi ,Gadpadi, Vellore district ,
× RELATED மல்லிகையில் மகசூல் பெறும் வழிகள்