×

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காட்பாடியில் பரபரப்பு

வேலூர், ஜூன் 15: காட்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் பிரபல தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் இமெயில் முகவரிக்கு நேற்று முன்தினம் வந்த தகவலில், மர்ம நபர் ஒருவர் பள்ளி வகுப்பறையில் குண்டு வைத்திருப்பதாகவும், அதனை உங்களால் கண்டுபிடிக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி தாளாளர் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் முகவரியை ஆய்வு செய்ததில், அதே பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவனின் இமெயில் முகவரி என்று தெரியவந்தது. உடனடியாக அந்த மாணவனை நேற்று காலை பெற்றோருடன் வரவழைத்த பள்ளி தாளாளர் விசாரணை நடத்தினார். இதில் மாணவன், விளையாட்டுக்காக, அதை செய்ததாக தெரிவித்தானாம். இதையடுத்து அம்மாணவனை பள்ளி தாளாளர் எச்சரித்ததுடன், பெற்றோருக்கும் உரிய அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இச்சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காட்பாடியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Gadbadi ,Vellore ,Gadpadi ,Gadpadi, Vellore district ,
× RELATED சாமியாரை அடித்துக்கொன்று சடலம்...