×

சென்னையில் 2025ம் ஆண்டுக்குள் ரூ.2,820 கோடியில் 6 பெட்டிகளுடன் கூடிய 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்க திட்டம்!!

சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரூ.2,820 கோடியில் 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் திருவொற்றியூர் வின்கோ நகரில் இருந்து விமான நிலையம் மற்றும் சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை இடையே சுமார் 55 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இருப்பினும் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் வரும் காலங்களில் அதன் தேவை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் தினசரி காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 45 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் வரும் 2025ம் ஆண்டுக்குள் எதிர்கால பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தலா 6 பெட்டிகளுடன் கூடிய ரூ.2,2820 கோடியில் 28 புதிய ரயில்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் தேவையை திறம்பட கையாளவும் பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தை வழங்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் 2025ம் ஆண்டுக்குள் ரூ.2,820 கோடியில் 6 பெட்டிகளுடன் கூடிய 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்க திட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvottiyur Vinco Nagar ,Central ,Parangimalai… ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் கைது