×

தண்ணீர் நிரம்பி இருப்பதால் கல்லடிக்கொல்லை ஓடக்கரை வடிகாலை தூர்வார வேண்டாம்

*விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு

முத்துப்பேட்டை : தண்ணீர் நிரப்பி இருப்பதால் கல்லடிக்கொல்லை ஓடக்கரை வடிகாலை தூர் வார வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துப்பேட்டை அடு த்த ஜாம்புவானோடை ஊராட்சி கல்லடிக்கொல்லை கிராமத்தில் அம்மா தர்கா பின்புறம் செல்லும் ஓடக்கரை வடிகால் என்பது ஆசாத்நகரை ஒட்டி செல்லும் கோரையாற்றிலிருந்து பிரிந்து இவ்வழியாக வடக்காடு கிராமம் சென்று கந்தபரிச்சான் ஆற்று குறுக்கே சைபன் வழியாக தில்லைவிளாகம் சென்று அடைகிறது.

இந்த வடிகால் மூலம் சுற்று பகுதியில் பெய்யும் மழைநீரை வடிய பயன்படுவதுடன் வெள்ளக் காலங்களில் மிகப்பெரிய வடிகாலாக உள்ளதுடன் இப்பகுதிக்கு நிலத்தடிநீரை பெற்று தரும் ஒரு வடிகாலாக உள்ளது.அதுமட்டுமின்றி இப்பகுதியில் உள்ள சுமார் 100 எக்டேர் விவசாய நிலத்திற்கு பாசனத்தை பெற்று தரும் ஒரு பாசன வடிகாலாகவும் உள்ளது. மேலும் இந்த வடிகாலிலிருந்து தென்னந்தோப்புகளுக்கும் நீரை பயன்படுத்தி வருவதுடன் இப்பகுதி மக்கள் குளிக்கவும் மற்ற தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படி முக்கியத்துவம் இந்த வடிகாலில் தற்போது பெய்த மழையால் அளவுக்கு அதிகமாக நீர் நிரம்பி உள்ளது. இதனால் மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இந்த ஓடக்கரை வடிகாலை பொதுப்பணித்துறை சார்பில் தூர் வாரப்படுவதாக சில தினங்களுக்கு முன்பு பொக்ளின் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. நீர் நிரம்பி இருக்கும்போது எப்படி தூர வரமுடியம்? என்ற சந்தேகம் மக்களுக்கு கிளம்பியது. இதனால் அதர்ச்சியடைந்த விவசாயிகளும் கிராம மக்களும் தூர் வாரும் பணியை தற்போது துவங்க கூடாது இதனால் எந்த பயனுமில்லை அதனால் அடுத்த ஆண்டு வரட்சியான நேரத்தில் தூர் வார வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் தற்போது பொதுப்பணித்துறை பணியை துவங்காமல் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பசுபதி, விவசாயிகள் வீரமணி, பாலையன், பக்கிரிசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் ஆகியோர் கூறுகையில், மிக முக்கியமான இந்த ஓடக்கரை வடிகால் இந்த கிராம மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வருகிறது. இதனை தற்போது தூர் வாரவேண்டும் என்பது அவசியமில்லை. அப்படியே அதிகாரிகள் தூர் வார நினைத்தால் இரண்டு மாதங்களுக்கு முன்பு வடிகால் வறண்டு காணப்பட்டது.

அந்த நேரத்தில் பணியை துவங்கி முடித்து இருக்கலாம். தற்போது பெய்த கோடை மழையால் வடிகால் நெடுவேங்கும் நீர் நிரம்பி உள்ளது. அதனால் தூர் வாருவது தேவை இல்லாத செயல். அதனால் நடப்பாண்டு தூர் வார வேண்டாம். அடுத்த ஆண்டு வறட்சி நேரத்தில் பணியை துவங்க வேண்டும். தற்போது இதற்காக வந்துள்ள நிதியை வேறு தேவைக்கு பயன்படுத்தவேண்டும் அப்படி மீறி தூர் வார நினைத்தால் மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.

The post தண்ணீர் நிரம்பி இருப்பதால் கல்லடிக்கொல்லை ஓடக்கரை வடிகாலை தூர்வார வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Kalladikolla ,Muthupettai ,Amma dargah ,Kalladikollai ,Jambuwanodai Panchayat ,Muthuppet ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் கண்களுக்கு விருந்தளித்த கொண்றை பூக்கள்