×

3 நாள் நடந்த ஜமாபந்தி நிறைவு மக்களிடம் இருந்து 353 மனுக்கள் குவிந்தன

*48 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு

*உத்தரவு நகலை கலெக்டர் வழங்கினார்

திருவாரூர் : திருவாரூர் தாலுகா அலுவலகத்தில் நேற்றுடன் முடிவடைந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மொத்தம் 353 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் உடனடி தீர்வாக 48 மனுக்களுக்கான உத்தரவினை மனுதாரர்களுக்கு கலெக்டர் சாரு வழங்கினார்.திருவாரூர் மாவட்டத்தில் 1433ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சியானது (ஜமாபந்தி) கடந்த 11ம் தேதி துவங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைகிறது.

அதன்படி திருவாரூர் வட்டத்தில் கலெக்டர் தலைமையிலும், கூத்தநல்லூர் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், குடவாசல் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், வலங்கைமான் வட்டத்தில் மன்னார்குடி வருவாய் நீதிமன்ற தனித்துணை ஆட்சியர் தலைமையிலும் நடைபெற்றது.

நீடாமங்கலம் வட்ட த்தில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும், முத்துப்பேட்டை வட்டத்தில் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும் நேற்று வரையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நன்னிலம் வட்டத்தில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், மன்னார்குடி வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் நடைபெறும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியானது இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் திருவாரூர் தாலுக்கா அலுவலகத்தில் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியானது திருக்கண்ணமங்கை உள்வட்டத்திற்குட்பட்ட நெய்குப்பை, செம்மங்குடி, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், மணக்கால், அரசவணங்காடு, காப்பனமங்கலம், எண்கன், அம்மையப்பன், வடகண்டம், திருக்கண்ணமங்கை, அகரத்திருநல்லூர், காட்டூர், இலவங்கார்குடி, ஆணைவடபாதி, தியாகராஜபுரம், குளிக்கரை, தேவர்கண்டநல்லூர் மற்றும் பெருந்தரக்குடி ஆகிய கிராமங்களுக்கும், திருவாரூர் உள்வட்டத்திற்குட்பட்ட கீழகாவாதுக்குடி, ராமகயை, பள்ளிவாரமங்கலம், பழையவலம், நடப்பூர், செருகுடி, வைப்பூர், குரும்பேரி, சோழங்கநல்லூர், திருவாதிரைமங்கலம், ஆமூர், ஓடாச்சேரி, கல்லிக்குடி, அடிபுதுச்சேரி, பழவனக்குடி, தெற்குசேத்தி, வடக்குசேத்தி, விளமல், தண்டலை, பெருங்குடி, விஜயபுரம், புலிவலம், கிடாரங்கொண்டான், சுந்தரவிளாகம், அடியக்கமங்கலம் மற்றும் சேமங்கலம் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற்றது.

மேலும் குன்னியூர் உள்வட்டத்திற்குட்பட்ட கல்யாணமகாதேவி, வெங்கடேஸ்வரபுரம், அலிவலம், கருப்பூர், தப்பளாம்புலியூர் 1 மற்றும் தப்பளாம்புலியூர் 2, புதுபத்தூர், கீழக்கூத்தங்குடி, நாரணமங்கலம், மாங்குடி, வடகரை, ராதாநல்லூர், கடுவங்குடி, திருநெய்பேர், கல்யாணசுந்தரபுரம், குன்னியூர், வேப்பத்தாங்குடி, வஞ்சியூர், திருக்காரவாசல், பின்னவாசல், உமாமகேஸ்வரபுரம் மற்றும் புதூர் ஆகிய கிராமங்களுக்கும் என மொத்தம் 3 நாட்கள் நடைபெற்றது. ஜமாபந்தி நிகழ்ச்சியானது நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் மேற்படி கிராமங்களை சேர்ந்த பொது மக்களிடமிருந்து பட்டா பெயர் மாற்றம், சிட்டா அடங்கல், இலவச வீட்டுமனை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 353 மனுக்கள் பெறப்பட்டது. இதில் உடனடி தீர்வாக 48 மனுக்களுக்கான உத்தரவினை கலெக்டர் சாரு மனுதார்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் ராஜா, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post 3 நாள் நடந்த ஜமாபந்தி நிறைவு மக்களிடம் இருந்து 353 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : jamabandhi ,Thiruvarur ,Tiruvarur ,
× RELATED செங்கல்பட்டு ஜமாபந்தியில் மனு அளித்த...