×

சாலிகிராமத்தில் அறை எடுத்து கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது..!!

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் சர்வீஸ் அபார்ட்மெண்ட்டில் அறை எடுத்து விலை உயர்ந்த கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அபார்ட்மெண்ட்டில் போதைப்பொருள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அறை ஒன்றில் மதுபோதையில் சந்தேகத்துடன் இருந்த 2 பேரை சோதித்தபோது விலை உயர்ந்த கஞ்சா இருப்பது தெரிய வந்தது.இருவரும் இருந்த அறையில் விலை உயர்ந்த 35 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ரூ.45,000 மதிப்புள்ள கஞ்சா வைத்திருந்த சாலிகிராமம் அபினேஷ், சைதாப்பேட்டை கௌரிசங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post சாலிகிராமத்தில் அறை எடுத்து கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chaliraram, Chennai ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...