×

அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை: 2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 1.1.2024 முதல் 9% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239%-ஆக உயர்த்தி வழங்கப்படும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும்.

The post அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...