×

தூத்துக்குடி உப்பளத்தில்மின்மோட்டார் திருட்டு

தூத்துக்குடி, ஜூன் 14: தூத்துக்குடி தெற்கு சோட்டையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுடலை(55). இவர், விவேகானந்த நகர் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான உப்பளத்தை வாடகைக்கு எடுத்து கடந்த 4 ஆண்டுகளாக உப்பள தொழில் செய்து வருகிறார்.கடந்த 12ம் தேதி காலையில் உப்பளத்துக்கு சென்ற போது அங்கிருந்த தண்ணீர் பம்புக்கான ₹25 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டார் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்துசுடலை அளித்த புகாரின்பேரில் தாளமுத்துநகர் எஸ்ஐ ராஜாமணி வழக்கு பதிந்து, மின் மோட்டாரை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

The post தூத்துக்குடி உப்பளத்தில்மின்மோட்டார் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tuticorin Uppalam ,Thoothukudi ,Sudalai ,South Chottayanthoppu ,Balasubramanian ,Vivekananda Nagar ,
× RELATED தூத்துக்குடி விஸ்வபுரத்தில் மழைநீர்...