×

தெரு நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

 

பாலக்காடு, ஜூன் 14: அட்டப்பாடி அகழி அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அகழி அரசு மருத்துவமனைக்கு அருகே நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சுமார் 7 வயதுடைய ஆண் புள்ளி மானை தெருநாய்கள் விரட்டி கடித்து குதறியது. இதனால் மான் மிரண்டு ஊருக்குள் புகுந்து அடர்ந்த புதருக்குள் தஞ்சம் அடைந்தது.

இதனை பார்த்த ஊர் பொதுமக்கள் தெரு நாய்களை விரட்டி விட்டு மானை மீட்டு புதூர் செக்‌ஷன் வன அதிகாரி பினுவிற்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் வனத்துறை அதிகாரி பினு தலைமையில் விரைந்து வந்த வனத்துறை காவலர்கள் மானை மீட்டு ஆய்வு செய்தனர். பின்னர் புதூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மானை வனத்துறை காவலர்களுடன் அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி புள்ளி மான் உயிரிழந்தது. இதையடுத்து உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் மானின் உடல் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

The post தெரு நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Attappadi ,Palakkad District ,Attappadi Aghasi Government Hospital ,
× RELATED திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில்...