×

கோபி அருகே மின்சாரம் தாக்கி சலூன் கடை தொழிலாளி பலி

 

கோபி, ஜூன் 14: ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவருக்கு தரணிகுமார் (19), மற்றும் தினேஷ்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். தரணிகுமார், கோபி அருகே உள்ள டி.என். பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் அறை ஒன்றில் தங்கி, அதே பகுதியில் உள்ள அவரது உறவினருக்கு சொந்தமான சலூன் கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், தரணிகுமாரின் தாயார் காமாட்சி, நேற்று முன்தினம் காலை போன் செய்து உள்ளார். ஆனால், தரணிகுமார் போன் எடுக்கவில்லை. பலமுறை போன் செய்தும் எடுக்காததால் காமாட்சி, தரணிகுமார் தங்கி இருக்கும் கள்ளிப்பட்டியில் உள்ள அறைக்கு நேற்று மாலை வந்துள்ளார்.அப்போது, வீட்டின் கதவு உட்புறம் பூட்டப்பட்டு இருந்தது. காமாட்சி பலமுறை சத்தமிட்டும், கதவு திறக்காததால் பின்புறம் உள்ள கதவு வழியாக உள்ளே சென்று பார்த்த போது, தரணிகுமார் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தரணிகுமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.போலீசார் நடத்திய விசாரணையில், தரணிகுமார் பழுதடைந்த மின் விசிறியை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கோபி அருகே மின்சாரம் தாக்கி சலூன் கடை தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Gobi ,Nandakumar ,Andiyur Mariamman temple road ,Erode district ,Dharani Kumar ,Dinesh Kumar ,TN ,Palayam ,Dinakaran ,
× RELATED பணம்தான் சந்தோஷத்தைத் தரும் என்கின்றார்களே, உண்மையா?