×

அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிற் பயிற்சி பெற அழைப்பு

 

திருச்சி. ஜூன் 14: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு வருட தொழிற்பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., கும்பகோணம் திருச்சி மண்டலம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம்,

பட்டயபடிப்பு (இயந்திரவியல்/தானியியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை/அறிவியல்/வணிகம் பட்டதாரிகள் 2020,2021,2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் (Online) வழியாக வரவேற்க்கப்படுகின்றன.

மேலும் விபரங்களுக்கு இணையதளம் www.boat-srp.com (Newsமற்றும்Events column) ஐ பார்க்கவும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை.8 என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ள இளைஞர்கள் இந்த ஒரு வருட தொழிற் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிற் பயிற்சி பெற அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Government Transport Corporation ,Tamil Nadu Government Transport Corporation ,Tamil Nadu Government Transport Corporation (Kumba) Ltd. ,Kumbakonam Trichy Zone ,Training ,Dinakaran ,
× RELATED பொய் தகவல்களை கூறி வழக்கு தொடர்ந்த...