காரைக்கால்,ஜூன் 14: காரைக்கால் அருகே அம்பாள் சத்திரத்தில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா மேம்பாடு பணியை நாஜிம் எம்எல்ஏ ஆய்வு செய்தார். காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அம்பாள் சத்திரத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை குடிநீர் தொட்டி அருகே குழந்தைகள் விளையாட பயன்படுத்தப்பட்டு வந்த பெருந்தலைவர் காமராஜர் பூங்கா அமைந்துள்ளது.
பூங்காவை மேம்படுத்துவது சம்பந்தமான தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தலைமையில் அப்பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பேசிய நாஜிம் எம்எல்ஏ புதிய மற்றும் நவீன விளையாட்டு உபகரணங்களுடன் இந்த பூங்காவை மேம்படுத்த வேண்டும் என்று அனைத்து விளக்குகளையும் சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படியும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரசேகரிடம் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் செயற்பொறியாளர் மகேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
The post காரைக்கால் அருகே அம்பாள் சத்திரத்தில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா மேம்பாடு பணி appeared first on Dinakaran.