×
Saravana Stores

நியூயார்க்கில் ஆடியும் அடுத்த சுற்று கேப்டன் ரோகித் நிம்மதி

நியூயார்க்: ஐசிசி டி20 உலக கோப்பையின் 25வது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் அமெரிக்காவும், முன்னாள் சாம்பியன் இந்தியாவும் முதல் முறையாக மோதின. நியூயார்க்கின் புத்தம் புதிய ஆடு களத்தில் விளையாடுவது அனுபவ அணிகளுக்கே பெரும் சவாலாக இருந்தது. அதனை இந்தியக் கேப்டன் ரோகித், ‘இங்கு எப்படி ஆடுவது தெரியவில்லை’ என்று வெளிப்படையாக சொன்னார். எனினும் நியூயார்க் அரங்கின் கடைசி ஆட்டத்தில் இந்தியா அணி போராடி அமெரிக்காவை வீழ்த்தியது.

கூடவே ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் சூப்பர்-8 சுற்றுக்கும் ஏ-பிரிவில் இருந்து முதல் அணியாக முன்னேறியது. அந்த வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ‘இது ஒரு கடினமான ஆட்டமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். இங்கு ரன் எடுப்பது சிரமம் என்பதால், பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியம் என்பதை எங்கள் அணி உணர்ந்து இருந்தது. அர்ஷ்தீப் உட்பட எல்லா பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு அவர்களை குறைந்த ரன்களுக்குள் அடக்கினர்.

அதை போராடி எட்டிய பெருமை சூரியகுமார், துபே இணைக்குதான் சேரும். அமெரிக்க அணிக்காக விளையாடும் இந்திய தோழர்களுடன் விளையாடியதிலும், அவர்கள் முன்னேற்றத்திலும் மகிழ்ச்சி. அவர்களில் பலரை கடந்த ஆண்டு மேஜர் கிரிக்கெட் லீக்(சிஎம்எல்) தொடரிலும் பார்த்தேன்.

அவர்கள் அனைவரும் கடின உழைப்பாளிகள், கூடவே புதிய அடையாளத்தை உருவாக்குகின்றனர். இந்த களத்தில் நாங்கள் விளையாடிய 3 ஆட்டங்களிலும் கடைசி வரை தாக்குப் பிடிக்க வேண்டி இருந்தது. சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி இருப்பது பெரிய நிம்மதி. அதற்கு நமது வீரர்களின் அனுபவங்கள் முக்கிய காரணம்’ என்றார்.

The post நியூயார்க்கில் ஆடியும் அடுத்த சுற்று கேப்டன் ரோகித் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Rohit Nimmathi ,New York ,USA ,India ,ICC T20 World Cup ,Dinakaran ,
× RELATED நியூயார்க் நகரத்தில் தொடங்கிய காமிக் கான் நிகழ்ச்சி..!!