×

நிதி நிறுவனங்களை நடத்தி பாஜ மாநில நிர்வாகி பல கோடி மோசடி: விருதுநகர் எஸ்பி ஆபீசில் புகார்

விருதுநகர்:விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் சிவகாசி அருகே ஆலங்குளத்தை சேர்ந்த திருச்செந்தூர் ராஜ் தலைமையில் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகாசி பஸ் நிலையம் பின்புறம் தனியார் சிட்பண்ட் நிறுவனம் இயங்கி வந்தது. அதன் கிளைகள் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களிலும் உள்ளது. இதனை பாஜ ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்ட பிரபு நடத்தி வருகிறார்.

இங்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை சீட்டு பிடிப்பதாகவும், மாத, வார, தினசரி தவணைகளில் பணம் செலுத்தலாம் எனக் கூறினர். 2வது சீட்டு முதல் விருப்பப்பட்ட சீட்டுகளில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறி ஏமாற்றி சீட்டு போட வைத்தனர். அதை நம்பி சீட்டு தொகை செலுத்தினோம். ஆனால் சீட்டை எடுக்க யாரையும் அனுமதிக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது அலுவலகம் மூடி கிடக்கிறது.

நடவடிக்கை எடுத்து கட்டிய பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கறிஞர் ராஜ்குமார் கூறுகையில், ‘‘சிவகாசியில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர், லட்சக்கணக்கில் பணம் கட்டி உள்ளனர். மதுரை, கோவை, திருப்பூர், திருச்சியிலும் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது’’, என்றார்.

The post நிதி நிறுவனங்களை நடத்தி பாஜ மாநில நிர்வாகி பல கோடி மோசடி: விருதுநகர் எஸ்பி ஆபீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Virudhunagar SP ,Virudhunagar ,Tiruchendur Raj ,Alangulam ,Sivakasi ,Coimbatore, ,Tirupur ,Dinakaran ,
× RELATED சமூகப் பணியும், மக்கள் நலப் பணியும் தொடரும்: எக்ஸ் தளத்தில் ராதிகா உறுதி